முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு

திங்கட்கிழமை, 10 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொல்கத்தா, ஐதராபாத் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கட்டணம் ரூ. 850 வரை வசூலிக்கப்படுகிறது. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கட்டணம் ரூ.700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.  ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில், சுகாதார மையங்களில் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதியில் இருந்து 18 முதல் 44 வயதுடையவர்களுக்காக தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி உள்ளன.  தடுப்பூசிகள் தலா ரூ.250-க்கு மத்திய அரசால் பெறப்பட்டு வழங்கப்படுகிறது.

ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு அதிக கட்டணத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் வெவ்வேறு விதமான விலையை தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்து உள்ளன.

டெல்லி, மும்பையில் உள்ள மருத்துவமனைகள் ஒரு தடவை தடுப்பூசி போட ரூ. 900 வசூலிக்கின்றன.  கொல்கத்தா, ஐதராபாத் மருத்துவமனைகளில் ரூ. 850 வரை வசூலிக்கப்படுகிறது. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி கட்டணம் ரூ. 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கோவா, பெங்களூரில் ரூ. 1350, நொய்டா, ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1250 வசூலிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ. 1200 வரை வசூலிக்கின்றன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ரூ. 1250 வரை வசூல் செய்கிறது. நாட்டிலேயே பெங்களூரில் அதிகபட்சமாக ஒரு தனியார் மருத்துவமனை ஒரு முறை தடுப்பூசி போட ரூ.1500 வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து