முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போட அனுமதி : அமெரிக்க மருந்து கழகம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, தங்களது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.  

இந்நிலையில், அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து