முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற மாநிலங்களுக்கு வழங்க ஆக்சிஜன் இருப்பு இல்லை : பினராய் விஜயன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் இனி பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 16-ம் தேதி வரை 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படும். அதன் பிறகு கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு வழங்குவதற்கு ஆக்சிஜன் இருப்பு இல்லை. மேலும் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து