முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் அறிமுகப்படுத்த திட்டம் : அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : அவசர நேரத்தில் கொரோனா நோயாளிகளின் உயிர்களை காக்க சென்னையை போல் பெங்களூருவில் ஆக்சிஜன் பஸ் அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அமைச்சர் பசவராஜ் பொம்மை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் ஒரு தனியார் நிறுவனம், நடமாடும் முறையில் ஆக்சிஜன் வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதாவது பஸ்கள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.  அத்தகைய மாதிரியை பெங்களூருவில் பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.

அதாவது, பெங்களூருவில் நடமாடும் ஆக்சிஜன் சிலிண்டர் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம். பஸ்கள் மூலம் நோயாளிகள் ஆக்சிஜன் பெற்று தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

அதே போல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே அதை வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். மருத்துவ படுக்கை முறைகேடு விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  தவறு செய்தவர்களுக்கு மட்டும் தக்க தண்டனை வழங்கப்படும். பெங்களூருவில் 5 ஆயிரம் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு அருகே இத்தகைய மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து