முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் "மாயா"

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

“ஓ மை கடவுளே”  “தீனி” படங்களை தொடர்ந்து, நடிகர் அசோக் செல்வன், தான் நடித்திருக்கும், காதல் காமெடி திரைப்படமான “ஹாஸ்டல்” மற்றும் தேசிய விருதை வென்று மோகன்லாலின் நடிப்பில் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள “மரக்கர்” படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர்,  நடிகை ப்ரியா ஆனந்துடன் இணைந்து “மாயா” எனும் குறும்படத்தில் நடித்துள்ளார்.

இக்குறும்படத்தினை Ani. I.V. சசி இயக்கியுள்ளார். I.We.Productions  இப்படத்தினை தயாரித்துள்ளது. ப்ரியா ஆனந்துடைய கதாப்பத்திரத்தின் பெயர்தான்  “மாயா”. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதுடன் எடிட்டிங் பணிகளையும் செய்துள்ளார்

Ani. I.V. சசி. ஒரு திரைக்கதை எழுத்தாளர் தனது  படைப்பின் கதையை, நீண்ட காலமாக எப்படி திட்டமிடுகிறார். அவரின் கனவு படைப்பை எப்படி தீர்மானிக்கிறார். இறுதியில் அவர் என்ன கதையினை முடிவு செய்கிறார். அவரின் பார்வையாளர்கள் யார் என்பது தான் “மாயா” குறும்படத்தின் கதை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து