முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் வெளியிடும் உலகின் சிறிய திரைப்படம்

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள இளங்காடு என்ற  ஊரைச் சேரந்த அன்புராஜசேகர் இயக்கியுள்ள Be Pretty  என்ற 5 நொடிகள் கொண்ட இத்திரைப்படம் உலகின் மிகச் சிறிய திரைப்படம் என்ற சாதனையுடன் Noble World Record என்ற நிறுவனம் விருது மற்றும் சான்றிதழ்  வழங்கியுள்ளது.

2005 ஆம் ஆண்டு 7 நொடிகள் கொண்ட  soldier boy என்ற திரைப்படமே World Recordல் இடம்பெற்ற உலகின் சிறிய திரைப்படமாக இதுவரை இருந்துவந்தது. ஆனால் தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு அச்சாதனையை முறியடித்துள்ளது Be pretty படம். Mask குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயக்கியுள்ள இயக்குனர்

அன்புராஜசேகர் இப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிட இருப்பதாக கூறினார்.

இத்தோடு நில்லாமல், தஞ்சை மக்களின் வாழ்வியலையும், விவசாய முறையையும், வட்டார மொழியையும் வெள்ளித்திரையில் பதிவிசெய்யும் வகையில் புதியதொரு படப்பிடிப்பு விரைவில்  தொடங்கவுள்ளதாகவும் கூறுகிறார் இந்த ரெக்காட் நாயகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து