முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய ஆடவர் - மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

11 பதக்கங்கள்...

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்ஸ் போட்டியில் 8 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றுள்ளது. எனினும் கடந்த 41 வருடங்களாக இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லவில்லை.

'ஏ' பிரிவில்...

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது இந்திய அணி. அந்தப் பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.

ஆடவர் அணி...

மன்ப்ரீத் சிங், ஸ்ரீஜேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், ருபிந்தர் பால் சிங், சுரேந்தர் சிங், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, ஹார்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, சுமித், ஷம்ஷெர் சிங், தில்ப்ரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார், மன்தீப் சிங், 

16 பேர் அணி...

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணி முன்னதாக அறிவிக்கப்பட்டது. அனுபவத்தையும், இளமையையும் சரிசமமான கலவையாக கொண்டுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணியில் 8 வீராங்கனைகள் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் 

ராணி ராம்பால்... 

போட்டியில் விளையாடியவர்கள். 8 வீராங்கனைகளுக்கு இது முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டியில் அடியெடுத்து வைப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே இந்திய அணி 1980, 2016-ம் ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இந்திய அணி வீராங்கனைகள் தற்போது பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

பெண்கள் அணி...

கோல்கீப்பர்: சவிதா, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா.

நடுகளம்: நிஷா, நேஹா, சுஷிலா சானு, மோனிகா, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி.

முன்களம்: ராணி ராம்பால், நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து