முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பை இந்திய அணி கைப்பற்றும்: சவுரவ் கங்குலி நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன் என இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.

மழையால் ரத்து...

இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவாத இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் சீசன் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய அணியில் 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறார்கள்

கங்குலி ஆலோசனை 

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எளிதாக இருக்காது... 

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது. இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முதலில் பேட்டிங் செய்யும் போது எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சாதகமான சூழ்நிலை...

2002-ம் ஆண்டு லீட்ஸ் அல்லது 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் நாம் முதலில் பேட்டிங் செய்தோம். ஆரம்ப அழுத்தத்தை சமாளித்து ரன்களை எடுத்தோம். அப்படிதான் அந்த போட்டிகளில் வென்றோம்.

நல்ல தொடக்கம்...

காலை வேளையில் மேக மூட்டமாக இருந்தாலும் இந்திய அணி டாஸ் ஜெயித்தால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அணிக்கு சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 20 ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும்.

சிறந்த நியூசி. அணி...

இது புஜாரா, கோலி மற்றும் ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல அத்தளத்தை அமைக்க உதவும். கடந்த 30-35 ஆண்டுகளில் இதுதான் சிறந்த நியூசிலாந்து அணி. அவர்கள் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளதால் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து