முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் !

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சவுதம்ப்டன் : நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

விஹாரி இல்லை...

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டது. விஹாரி இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

மழையால் பாதிப்பு...

சௌதாம்ப்டனில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மழை இல்லாததால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியது. 

பந்துவீச்சு தேர்வு...

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி களத்தில் இறங்கியது. இந்திய அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளருக்கு இடம் பெறவில்லை. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி ஏற்கனவே அறிவித்த ஆடும் லெவனை மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி:

1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. ஷுப்மான் கில், 4. புஜாரா, 5. ரகானே, 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8.  அஷ்வின், 9. பும்ரா, 10. இஷாந் சர்மா, 11. முகமது ஷமி.

நியூசிலாந்து: 

டாம் லாதம், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கைல் ஜாமிசன், கொலின் டி கிராண்ட்ஹோம், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.

6-வது நாளில் விளையாடுகிறது

போட்டிக்கான விதிமுறைகள் குறித்து ஐ.சி.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும்போது மாற்று நாளில் போட்டியை நடத்தலாம் என்று தெரிவித்தது. 23-ம் தேதியை அதாவது 6-வது நாளை மாற்று நாளாக அறிவித்தது. இதுகுறித்து போட்டி நடுவர் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.

முதல் நாளில் 6 மணி நேர இழப்பு ஏற்பட்டு விட்டதால் மாற்று நாளில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் 6-வது நாளில் இந்த டெஸ்ட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டி நடுவர் 5-வது நாள் ஆட்டத்தின்போதுதான் தனது முடிவை அறிவிப்பார்.

கருப்புப் பட்டையுடன் வீரர்கள்

இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து நேற்று விளையாடினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், சிகிச்சை பலனின்றி காலமானார். 91 வயது மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1959-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து