முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் உரை குறித்து டி.டி.வி. தினகரன் டுவீட்

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார். அதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. 

இந்நிலையில், கவர்னர் உரை குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

தமிழக கவர்னர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது. வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக இருக்கும் இந்த உரையில் உள்ள அம்சங்களை எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. 

ஏனெனில், மேகதாது அணை பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு, கவர்னர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து