முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா : புதிதாக 53,256 பேருக்கு தொற்று உறுதி

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. தினமும் 1 லட்சத்துக்கு குறைவாகவே தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று முன் தினம் 58 ஆயிரத்து 419 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்திருப்பது உறுதியானது. 

இந்நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 ஆயிரத்து 256 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக உயர்வடைந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 1,422 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,88,185 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 95.26 சதவீதமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 7,02,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 28 கோடியே 00 லட்சத்து 36 ஆயிரத்து 898 ஆக உள்ளது. 

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து