முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறையத் தொடங்கியதால் படிப்படியாக சகஜநிலை திரும்புகிறது. லாக்டவுனால் நின்றுபோன படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகுபலிக்குப் பிறகு மிகப்பிரமாண்டமாக ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார்.

ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிக்கும் இந்தப் படத்தில் அலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி போன்றவர்களும் நடிக்கின்றனர். இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையை கற்பனை சேர்த்து விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கும் கதைதான் ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் படமாகிறது.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா முதல்அலையால் படப்பிடிப்பு தடைப்பட்டு, இந்த வருடம் அக்டோபாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் அலை மீண்டும் குறுக்கிட, அக்டோபரிலும் படம் வெளியாகும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில், ஜுலை 1 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவது என முடிவு செய்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து