விக்ரம் படத்தில் அஞ்சாதே நரேன்

Narain 2021 06 22

Source: provided

சித்திரம் பேசுதடி வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு  அறிமுகமுனைவர் நரேன். முகமூடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு ஏற்ற தீனியாக அமைந்தது. இவர் கடைசியாக கார்த்தியின் கைதி படத்தில் இன்ஸ்பெக்ட்டர் வேடத்தில் நடித்து பலரின் கவனத்தை பெற்றார்.

லோகேஷ் கனகராஜ் அடுத்து கமலை வைத்து கேங்க்ஸ்டர் படமான விக்ரமை இயக்க உள்ளார். கமல் போலீஸ் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையவர் விவரம் தான் அதிகாரபூர்வமாக யாருக்கும் தெரியவில்லை. விஜய் சேதுபதி, பாஹத் பாசில், ஆன்டனி வர்கீஸ் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பு அறிவு சமீபத்தில் இணைந்தனர்.  இந்நிலையில் தனது சமூகவலைத்தளத்தில் நரேன் பதிவிட்ட போட்டோ பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த போட்டோவை க்ளிக்கியது லோகேஷ் கனகராஜ் என பதிவிடவே ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. வயதான கெட் அப் எனவும் பதிவிட இது கட்டாயம் லோகேஷ்,  கமல் அவர்களை வைத்து இயக்கும் விக்ரம் படத்தில் நரேனின் கெட் அப் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து