முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட விழாக்களில் கூழாங்கல்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த “கூழாங்கல் எனும் Pebbles” திரைப்படம், உலகத் திரைப்பட விழாக்களில், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இம்மாதம் அடுத்தடுத்து நடைபெறக்கூடிய ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, மிட்நைட் சன் திரைப்பட விழா மற்றும் லண்டன் இந்திய திரைப்பட விழா, ஆகிய திரைவிழாக்களிலும் பங்கேற்றது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஆசியா கண்டத்தில் நடைபெறும், மிகப்பெரும் உலக திரைப்பட விழாவான இதில் 24-வது பதிப்பில் “கூழாங்கல் ” திரைப்படம்  திரையிடப்படுகிறது.  மிட்நைட் சன் திரைப்பட விழாவில்,  36-வது பதிப்பில் இப்படம்  “Gems of New Cinema” பிரிவில் திரையிடப்படுகிறது.  

லண்டன் இந்திய திரைப்பட விழாவில்,  “ Young Rebel ” பிரிவில் திரையிடப்படுகிறது.  இத்திரைப்பட விழாக்களில் தேர்வானது குறித்து இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறியதாவது:

கூழாங்கல் திரைப்படம் மொழி மற்றும் எல்லைகளை கடந்து திரைப்பட விழாக்களின் மூலமாக  மக்களிடம் சென்றடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.  இத்திரைப்பட விழாக்களில் தேர்வானது குறித்து தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கூறியதாவது:

“கூழாங்கல்” எங்கள் நிறுவனத்தின் மிகப்பிரத்கேயமான படைப்பாகும். இப்படம் உலகம் முழுக்க பெரும் பாரட்டுக்களை குவித்து வருவதன் மூலம் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து