முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் பிஸியான இசை அமைப்பாளர்

சனிக்கிழமை, 26 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகை ஜெயசித்ரா மகனும், இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்ரீஷ், அரிய வகை இரிடியம் என்ற பொருளை தருவதாகவும், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் அது விலை போகும் என்றும் கூறி, 2கோடியே 20 லட்ச ரூபாயை பெற்று, போலி இரிடியத்தைக் கொடுத்து மோசடி செய்து விட்டதாக, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர்  நெடுமாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி அம்ரீஷ் சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இசையமைப்பு சார்ந்த பணிகளுக்காக நெடுமாறனிடம் வாங்கிய 2 கோடியே 20 லட்சத்தில், ஏற்கனவே கொடுத்த தொகை போக, மீதமுள்ள 62 லட்சத்திற்கான  வரைவோலையை புகார்தாரரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை ஏற்று புகாரை நெடுமாறன் திரும்பப் பெற்றுள்ளதால்  வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார்,  அம்ரிஷ் தரப்பு விளக்கத்தை ஏற்று அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மிகுந்த கலக்கத்தில் இருந்து வந்த நடிகை ஜெயசித்ராவின் குடும்பம் தற்போது நிம்மதி அடைந்துள்ளது. இதன் மூலம், மீண்டும் இசை கோர்ப்பில் பிஸியாகியுள்ளார்  இசை அமைப்பாளர் அம்ரீஷ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து