முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து: டி - 20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே பிரிவில் 'இந்திய-பாக்.' அணிகள்: ஐ.சி.சி. அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் பி.சி.சி.ஐ நடத்தும் டி-20 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான அணி பிரிவுகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இது இந்திய - பாக். கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐய்யமில்லை.

அமீரகத்துக்கு மாற்றம்...

டி-20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி-20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் சுற்றுகள்...

வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும். 

பி.சி.சி.ஐ வழிகாட்டல்...

முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் பி.சி.சி.ஐயின் சார்பாகவே டி-20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

குரூப் 1 - பிரிவு...

இந்தப் போட்டியில் பங்குபெறும் அணிகளை டி-20 தரவரிசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது ஐ.சி.சி. குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள். 

குரூப் 2 - பிரிவு...

அதேபோல குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தச் சுற்றுக்கு சூப்பர் 12 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். 

தகுதிச்சுற்று...

தகுதிச்சுற்று ஆட்டங்கள் முதல் சுற்று ஆட்டங்களாக அழைக்கப்படுகின்றன. அவற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

பிரதானச் சுற்று... 

தகுதிச் சுற்றுப் போட்டிகளான முதல் சுற்றுப் போட்டிகள் யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெறுகின்றன. சூப்பர் 12 பிரதானச் சுற்றுப் போட்டிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் நடைபெறவுள்ளன.

2021 - டி-20 உலகக் கோப்பை

முதல் சுற்று

குரூப் ஏ: 

இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா.

குரூப் பி: 

வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா.

சூப்பர் 12 

குரூப் 1: 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள்.

குரூப் 2: 

இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து