முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி வீரர்கள் - வீராங்கனைகள் விவரம்

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் - வீராங்கனைகள் முழு விவரம் வருமாறு.,

பெண்கள் பிரிவு:

1) தேஜஸ்வினி சாவந்த் - அங்கட் பாஜ்வா

பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (பொசிஷன்).

தேஜஸ்வினி சாவந்த்

தேஜஸ்வினி சாவந்த் 1980 செப்டம்பர் 12-ம் தேதி பிறந்தார். இவர் மராட்டிய மாநிலத்தில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்கிறார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2009-ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 2010-ம் ஆண்டு

நடைபெற்ற 50 மீட்டர் ரைபி ப்ரோனி இவெண்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

2) பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல்.

மனு பக்ஹர் 

அரியானாவை சேர்ந்த மனு பக்ஹர் 2002 பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். 19 வயதான மனு பக்ஹர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். 2018-ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் மனு பக்ஹர் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மிகக்குறைந்த வயதில் (16) சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற நபர் என்ற பெருமையை மனு பக்ஹர் பெற்றுள்ளார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.   

ரஹி சர்னோபெட் 

ரஹி சர்னோபெட் 1990 அக்டோபர் 30-ம் தேதி பிறந்தார். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். 30 வயதான ரஹி சர்னோபெட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். 2013, 2019, 2021-ம் ஆண்டுகளில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டிகளில் ரஹி சர்னோபெட் 4 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2010,2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2018 ஆசியன் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்கீட் 

ஆண்கள் பிரிவு

1) அங்கட் பாஜ்வா

அங்கட் பாஜ்வா 1995-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி சத்தீஷ்கரில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில் பங்கேற்கிறார். 2018 ஆசியன் சூட்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் அங்கட் பாஜ்வா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆசியன் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஸ்கீட் பிரிவில் 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

2) அமிராஜ் அகமது கான்

அமிராஜ் அகமது கான் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1975-ம் ஆண்டு நம்பவர் 2-ம் தேதி பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில் பங்கேற்கிறார். இவர் 2007 மற்றும் 2008 சிங்கப்பூர் ஒப்பன் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2010 காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து