முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - இலங்கை அணிகள் இன்று கொழும்புவில் மோதல்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு: இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. 

தவான் கேப்டன்...

மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் ஆட உள்ளது. இன்று முதல் ஒருநாள் ஆட்டம் கொழும்புவில் தொடங்கவுள்ள நிலையில் தசூன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆட்டம் ஒத்திவைப்பு...

முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஜூலை 13-ம் தேதி தொடங்கவிருந்த இந்த ஒரு நாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

தசூன் ஷனகா... 

இந்த நிலையில், முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக ஷிகர் தவான் தலைமையிலான அணி இலங்கை சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிராக இன்று தொடங்க இருக்கும் ஒருநாள் மட்டும் மற்றும் டி-20 அணிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டு கேப்டனாக தசூன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய உத்தேச அணி...

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சிறந்த 11 வீரர்களை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் ஷிகார் தவான் இணைந்து தேர்வு செய்துள்ளனர். அதன்படி உத்சே இந்திய அணி வருமாறு., ஷிகார் தவான் (கேப்டன்) ப்ரித்தீவ் ஷா, சூர்யாகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார் நவ்தீப் சைனி, சஹால், குல்தீப் யாதவ்.

இலங்கை அணி : 

தசூன் ஷனகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்ணான்டோ, பானுகா ராஜபட்ச, பதும் நிஸாங்கா, சரீத் அஸலங்கா, வனின்டு ஹஸரங்கா, அஷென் பன்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சண்டகன், அகிலா தனஞ்செயா, ஷிரன் பெர்ணான்டோ, தனஞ்செயா லக்ஷன், இஷான் ஜெயவர்தனே, பிரவீன் ஜெயவிக்கிரமா, அஸிதா பெர்ணான்டோ, கஸுன் ரஜிதா, லஹிரு குமரா, இசுரு உடனா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து