முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல்: பங்கேற்கும் இந்திய அணியினர்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் - வீராங்கனைகள் விவரம் வெளியாகியுள்ளது.

ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டாக்

ஸ்ரீஹரி நடராஜ்...

ஸ்ரீஹரி நடராஜ் 2001 ஜனவரி 16-ம் தேதி பிறந்தார். 21 வயதான நடராஜ் பெங்களூரை சேர்ந்தவர். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டாக் பங்கேற்கிறார். 

ஆண்கள் 200 மீட்டர் பட்டர்ஃப்லை

சஞ்ஜன் பிரகாஷ்...

கேரளாவை சேர்ந்த சஞ்ஜன் பிரகாஷ் 1993 செப்டம்பர் 14-ம் தேதி பிறந்தார். இவர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் 6 தங்கம் மற்றும் 3 சில்வர் பதக்கங்களை வென்று தடகள பிரிவுக்கான இந்திய தேசிய விளையாட்டு போட்டிகளின் சிறந்த வீரராக முன்னேறினார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்டுகள் 200 மீட்டர் பட்டர்ஃப்லை பிரிவில் பங்கேற்கிறார். கேரளாவை சேர்ந்த சஞ்சன் பிரகாஷ் தமிழ்நாட்டின் நெய்வேலியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்தார். சஞ்ஜன் பிரகாஷ் தற்போது கேரள காவல்துறையில் பணியாற்றி வருகிறார். 

பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக்

மானா படேல்...

மானா படேல் 2000 மார்ச் 18-ம் தேதி பிறந்தார். 21 வயதான மானா படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவில் பங்கேற்கிறார். ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய பெண் வீராங்கணை இவர் ஆவார். 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டில் மானா படேல் 4 தங்கப்பதங்கம் வென்றுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து