முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ சென்றது முதல் குழு

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள். 85 பந்தயங்களில் நமது அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான். 

இந்நிலையில் இந்திய அணியின் துப்பாக்கிச் சுடுதல் குழு நேற்று காலை டோக்கியோ சென்றடைந்தது. இந்த குழுவில் வீரர்கள், அதிகாரிகள் என்று மொத்தம் 90 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

_________

தொடரை வென்ற மே.இ.தீவுகள்

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் மூன்று போட்டிகளை வெஸ்ட் இண்டீஸூம், 4-வது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது. இந்நிலையில் இன்று 5-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. 

இதனையடுத்து 20 ஓவரில் 200 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது.

___________

இங்கி.யை வீழ்த்தி பாக். முன்னிலை

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.  இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.  அந்த அணியின் லிவிங்ஸ்டோன் தன்னந்தனி ஆளாக போராடினார். 17 பந்தில் அரை சதமடித்த அவர் 43 பந்தில் 9 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 103 ரன்கள் குவித்து அவுட்டானார்.  இறுதியில், இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

____________

தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து.

இந்நிலையில் அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், அயர்லாந்து அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா அணி.

____________

இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் ஒருநாள் மட்டும், டி20 அணிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டு கேப்டனாக தஸூன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் ஆட்டம் கொழும்புவில் தொடங்கவுள்ள நிலையில் தஸுன் ஷனகா தலைமையில் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை அணி விவரம்: தஸுன் ஷனகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்ணான்டோ, பானுகா ராஜபட்ச, பதும் நிஸாங்கா, சரீத் அஸலங்கா, வனின்டு ஹஸரங்கா, அஷென் பன்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சண்டகன், அகிலா தனஞ்செயா, ஷிரன் பெர்ணான்டோ, தனஞ்செயா லக்ஷன், இஷான் ஜெயவர்தனே, பிரவீன் ஜெயவிக்கிரமா, அஸிதா பெர்ணான்டோ, கஸுன் ரஜிதா, லஹிரு குமரா, இசுரு உடனா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து