முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் மக்கள் ஆதரவு தருவார்கள்: தாமஸ் பேச் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் பொதுமக்கள் ஆதரவு தருவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு...

வரும் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் முதன்முறையாக அதில் தங்கியுள்ள ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தெரிவிக்க முடியாது...

இதுதொடர்பாக அமைப்புக் குழு சிஇஓ டோஷிரோ மியுடோ கூறியதாவது: தற்போதைய நிலையில், இதுபோன்ற தொற்று பாதிப்புகள் ஏற்படுவது சகஜம் தான்,. எனினும் பாதிப்பு யாருக்கு ஏற்பட்டது என்பதை தெரிவிக்க இயலாது. அவர் ஜப்பானைச் சேர்ந்தவர் இல்லை. விளையாட்டுடன் தொடர்புடையவர் தான். தற்போது 14 நாள்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

ஜப்பானியர்கள்...

ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 11,000 வீரர், வீராங்கனைகளும், இதர அலுவலர்களும் தங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் பொதுமக்கள் ஆதரவு தருவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையை பெற... 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஒலிம்பிக் போட்டியோ அல்லது எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் 100 சதவீத ஆதரவு கிடைக்காது. தற்போதைய தொற்று காலத்தில் இதுதொடர்பான விவாதம் சூழ்நிலையை மேலும் கடுமையாக்கும். கடுமையான கொவைட் தடுப்பு முறைகளால் மக்களின் நம்பிக்கையை பெற முயல்வோம். 

ரசிகர்கள் இன்றி...

ஒலிம்பிக் கிராமத்தில் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி தங்கலாம். 16-ம் நூற்றாண்டில் ஜப்பான்-கொரியா இடையே நடந்த போர் தொடர்பாக தென்கொரிய தரப்பினர் வைத்திருந்த பதாகைகளை அகற்றுமாறு ஐஓசி கூறிவிட்டது. கொரோனா நிலைமை மேம்பட்டால் தான் மைதானங்களில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து சிந்திக்க முடியும் என்றார்.

BOX - 1

எதிராக போராட்டம்

ஒலிம்பிக் போட்டி தொடங்க சில நாள்களே உள்ள நிலையில், சனிக்கிழமை டோக்கியோவில் போட்டிகளை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டக் குழுவினர் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச்சிடம் மனுவை அளிப்பதற்காக ஐஓசி நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்ற இடத்தருகே கூடினர். அப்போது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பால் ஏற்கெனவே ஓராண்டு கழிந்த நிலையில் தற்போது தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து