முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஒலிம்பிக் கிராமத்தில்' மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒலிம்பிக் கிராமத்தில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒத்திவைப்பு...

2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில்கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

இன்னும் 4நாட்கள்...

போட்டி தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில்,வீரர்- வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போட்டிகளை நடத்துவதற்காக டோக்கியோ நகரில்  ஒலிம்பிக் கிராமம்  அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கிராமத்தில்  11 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் மற்றும்  பல்லாயிரம்  பிற ஊழியர்கள்  தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைகளுக்கு பின்னர் வீரர்- வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  இடத்தில் தங்கிவருகின்றன்ர்.

வெளியிடவில்லை... 

ஒலிம்பிக் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். அவர் யார் என்ற தகவலை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிடவில்லை. 

மேலும் 2 பேருக்கு...

இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒலிம்பிக் கிராமத்தில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ நகரில் நேற்று முன்தினம் 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இதுவே அதிகமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து