முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் பந்திலேயே சிக்சர்: முதல் சர்வதேச போட்டியில் அரைசதம் விளாசிய இஷான்

திங்கட்கிழமை, 19 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

 கொழும்பு: இலங்கைக்கு எதிரான தான் அறிமுகமான முதல் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.

இஷான் அறிமுகம்... 

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 

முதல் பந்தில்...

அறிமுக வீரர் இஷான் கிஷன், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் விரைவாக அரை சதம் கடந்த இந்திய வீரர்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். 26 பந்துகளில் அரை சதம் அடித்த குருணால் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.

2-வது வீரர்... 

நேற்றைய ஆட்டத்தில் அரை சதம் அடித்ததன்மூலம், அறிமுகமான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். சர்வதேச டி-20 அறிமுக போட்டியின்போது முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.தனது பிறந்தநாளாளான நேற்று இஷான் கிரிக்கெட்டில் புதிய சாதனைகளை படைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து