முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களை தவறாக வழிநடத்தியதாக இந்திய டென்னிஸ் சங்கம் மீது போபண்ணா கடும் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 19 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவது பற்றி தவறாக வழிநடத்தியதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். 

டென்னிஸ் குழு...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - அங்கிதா ராணாவும் தகுதி பெற்றுள்ளார்கள். ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா - சுமித் நாகல் ஆகிய இருவரும் தகுதி பெறவில்லை.

குற்றச்சாட்டு...

எனினும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவது பற்றி தவறாக வழிநடத்தியதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது., சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் எங்களுடைய வாய்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

தவறாக வழிநடத்தல்...

காயம், உடல்நலக்குறைவு போன்ற காரணங்களைத் தவிர ஜூன் 22 அன்று காலக்கெடு முடிந்தபிறகு எந்த ஒரு மாற்றமும் அனுமதிக்கப்படாது என்பதில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெளிவாக இருந்தது. ஆனால் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் - வீரர்கள், அரசாங்க, ஊடகம் போன்றவற்றைத் தவறாக வழிநடத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து