முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை இந்திய அணியில் 'பிரித்வி - இஷான் கிஷான்' கட்டாயம் இடம் பெற வேண்டும்: ஹர்பஜன் சிங்

திங்கட்கிழமை, 19 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பிரமாதமாக ஆடிய பிரித்வி ஷா, இஷான் கிஷன் இல்லாத உலகக்கோப்பை டி-20 அணியை நாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை, இவர்களுக்காக மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை இவர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மதிப்பிடப் பட...

எமிரேட்ட்சில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற்றேயாக வேண்டுமென்கிறார் ஹர்பஜன் சிங். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “வீரர்களின் ஆட்டத்தை வைத்தே அவர்கள் மதிப்பிடப் படவேண்டும். ஒரு சர்வதேச போட்டியில் இவர்கள் இருவரும் ஆடிய விதம் அவர்களை டி-20 உலகக்கோப்பையில் எப்படி புறக்கணிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

இவர்கள் அவசியம்...

டி-20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமா? இத்தகைய வீரர்கள் அணியிலிருப்பது அவசியம். இவர்கள் எதிரணியில் யார் வீசுகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தங்களுக்கு வரும் இயல்பான அதிரடியை ஆடுகின்றனர். இவர்களுக்காக மூத்த வீரர்களை நீக்க வேண்டி வந்தாலும் தேர்வாளர்கள் பயப்படக் கூடாது. 

சூர்யகுமார் யாதவ்...

அவர்கள் இந்த வீரர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும், ஏன் சூர்யகுமார் யாதவ்வும் தன் இடத்தை டி-20 உலகக்கோப்பையில் ஸ்திரப்படுத்தியுள்ளார். அட்டாக், பாதுகாப்பு ஆட்டம் இரண்டுமே சூரியாவுக்கு வருகிறது” இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து