முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: விளையாட்டுக்கேற்ப விதிமுறைகளை மாற்ற பட வேண்டும்: நிபுணர்கள் குழு

திங்கட்கிழமை, 19 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டுக்கேற்ப விதிமுறைகளை மாற்ற பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

நிபுணர்கள் கவலை...

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, தென் ஆப்பிரிக்கா ஆடவர் கால்பந்து அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனையடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த கவலையை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

பெரும் அச்சுறுத்தல்...

ஒலிம்பிக் போட்டிகள் பல வீரர் வீராங்கனைகளின் கனவாக இருக்கலாம், த்ரில் வெற்றியும் ஏற்படலாம், நன்றாக ஆடி தோல்வியும் ஏற்படலாம் ஆனால் அந்த உற்சாகம், கவலைகளைத்தாண்டி தற்போதைய பெருங்கவலை கொரோனா வைரஸ் உருமாறிய வகைகளின் அச்சுறுத்தலெ என்கின்றனர்.

ரசிகர்கள் இன்றி...

ஏற்கெனவே ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறப் போகின்றன, அதே போல் பதக்கம் வெல்பவர்கள் ரசிகர்களின் ஆரவராரம் கரகோஷம் இன்றி தங்கள் பதக்கங்களை தாங்களே எடுத்து அணிந்து கொள்ள வேண்டியதுதான், பதக்கம் அணிவிப்பு வைபவமும் இல்லை.

பல கட்டுபாடுகள்...

பங்கேற்பாளர்கள் அனைவரும் முகக்கவசம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். தங்கம், வெள்ளி, வெண்கலம் இடையே நிறைய சமூக இடைவெளி. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பதக்கங்களை வென்ற வீரர்களே பிளேட்டிலிருந்து எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். கோல்டு மெடல் மேடையில் குரூப் போட்டோ கிடையாது.

கொரோனா உறுதி...

இத்தனை கெடுபிடிகளுடன் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா ஆடவர் கால்பந்து அணியில் தாபிசோ மோன்யானி, கமொஹெலோ மலாஸ்தி, வீடியோ அனலிஸ்ட் மரியோ மாஸ்தா ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிபுணர்கள் எச்சரிக்கை...

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடுப்பூசிக் கட்டாயம் என்று கூறவில்லை. விருப்பத்தெரிவாக விட்டு விட்டது. இது தொடர்பாக நிபுணர்கள் எச்சரித்தும் எந்த பயனும் இல்லை. மருத்துவக் குழுவில் உள்ள அமெரிக்க நிபுணர்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் “வெறும் பேச்சுத்தான், செயலில் ஒன்றுமில்லை” என்று சாடியுள்ளனர்.

விதிமுறைகள் மாற... 

மேலும் சில போட்டிகள் வீரர்களுக்கு இடையே உடல் ரீதியான தொடர்பு இருப்பதாகும், மல்யுத்தம், குத்துச் சண்டை போன்றவை ஹை ரிஸ்க், வெயிட் லிஃப்டிங் அவ்வளவு ரிஸ்க் இல்லாதது. பேட்மிண்டன் ரிஸ்க் இல்லாதது, மாறாக தடகளம், ரிஸ்க் நிரம்பியது. அதனால் அந்தந்த விளையாட்டுக்கேற்ப விதிமுறைகள் மாற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். 

கடும் விமர்சனம்...

மொத்தத்தில் நிபுணர்கள் குழு ஐ.ஓ.சி. மீது கடும் விமர்சனங்களை வைத்து ஒலிம்பிக் போட்டிகளில் கோவிட் தான் தங்கம் வெல்லும் போலும் என்று எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து