முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்கவுள்ளதாக ஐ.ஒ.சி அறிவிப்பு

புதன்கிழமை, 21 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நாளை (23-ம் தேதி) ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்க உள்ளது. 

10 ஆயிரம் மட்டும்...

வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

முன்மொழிந்தது... 

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேன் நகரைத் தேர்வு செய்துள்ளது. 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த ஐஓசி நிர்வாகக் குழு கடந்த ஜூனில் முன்மொழிந்தது. டோக்கியோவில் நடைபெறும் ஐஓசி 138-வது அமர்வில் இதுதொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

பெரும்பான்மை...

இந்த நிலையில், ஐஓசியின் 138-வது அமர்வு டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்றது. ஐஓசி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கான வாக்கெடுப்பு முடிவுகளை ஐஓசி வெளியிட்டுள்ளது. அதன்படி, 80 வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 77 வாக்குகள் பதிவாகின. 3-இல் வாக்குகள் பதிவாகவில்லை. இதனால், 39 வாக்குகள் பெரும்பான்மையாகக் கருதப்பட்ட நிலையில், 2032 ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த 72 பேர் 'ஆம்' என்று வாக்களித்துள்ளனர். 5 பேர் மட்டுமே 'இல்லை' என்று பதிலளித்துள்ளனர்.

பிரிஸ்பேனில்... 

இதனை அடுத்து 2032-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2018 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய கோல்ட் கோஸ்ட் உட்பட குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்ஜெல்ஸ்...

முன்னதாக 2024-ம் ஆண்டிற்கான போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், அதற்கடுத்த போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து