முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகள் அணி ஊழியருக்கு கொரோனா: ஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேப்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 2-வது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட பின்பு சில நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது.

சுற்றுப்பயணம்.... 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெற்றது. இதில் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

ஊழியருக்கு கொரோனா... 

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2- வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனை... 

இதையடுத்து, உடனடியாக போட்டி தொடங்குவது நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறைக்க்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில் 2-வது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து