டோக்கியோ ஒலிம்பிகில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் எடை 556 கிராமாம் !

Olympic-Medal 2021 07 23 0

Source: provided

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிகில் வழங்கப்படும்

தங்கப்பதக்கத்தின் எடை 556 கிராமாம். இந்த எடையை வைத்து இந்தியாவில் தங்கத்தின் தற்போதைய விலையின்படிபார்த்தால் ஒரு தடகள வீரர் வெல்லும் தங்கப் பத்தகத்தின் மதிப்பு ரூ. 26 லட்சத்துக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த பதக்கங்கள் அவ்வளவு விலை போகாது.

முழுவதும் தங்கமா?

பொதுவாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் தங்க பதக்கங்கள் முழுவதும் தங்கமாக இருக்காது. இந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக பதக்கங்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்ட பழைய மின்னணு கேஜெட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

32 கிலோ தங்கம்...

இந்த கேஜெட்டுகள் ஜப்பானில் வசிப்பவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் பதக்கங்களை தயாரிப்பதற்காக சுமார் 6.21 மில்லியன் பழைய மொபைல் போன்களை நன்கொடையாக அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 78,985 டன் எடை கொண்ட கேஜெட்களை கடந்த 2 ஆண்டுகளில் நன்கொடையாக பெற்றதாக ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதவிர தங்கப்பதக்கம் செய்ய மொத்தம் 32 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டது.

556 கிராம் எடை...

பொதுவாக, ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் ஆகும். வெள்ளிப் பதக்கம் 550 கிராம் எடையும், வெண்கலம் 450 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தங்கத்தின் தற்போதைய விலையின்படி, இந்த எடையை வைத்து பார்த்தால் ஒரு தடகள வீரர் வெல்லும் தங்கப் புத்தகத்தின் மதிப்பு ரூ. 26 லட்சத்துக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த பதக்கங்கள் அவ்வளவு விலை போகாது. ஒரு வீரர் தனது தங்கப் பதக்கத்தை விற்கச் சென்றால், அவருக்கு ரூ .65,790 மட்டுமே கிடைக்கும்.

ரூ .65,790 மதிப்பு...

இப்போது நீங்கள் நினைக்கலாம், ஒரு தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் என்றால், ஏன் இவ்வளவு விலை குறைவாக உள்ளது என்று? 556 கிராம் எடை கொண்ட ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தில், 6 கிராம் தங்கமும் 550 கிராம் வெள்ளியும் மட்டுமே உள்ளது. எனவே, தங்கத்தின் மதிப்பு ரூ.28,500 ஆகவும், பதக்கத்தில் உள்ள வெள்ளி இந்தியாவில் தற்போதைய விலைக்கு ஏற்ப ரூ.37,290 ஆகவும் கிடைக்கும். எனவே, தங்கப் பதக்கத்தின் மொத்த விலை ரூ .65,790 ஆக இருக்கும்.

சிறப்பு ஷெல்லில்...

இதுதவிர டோக்கியோ ஒலிம்பிக் 2021-ல், இந்த பதக்கங்கள் சிறப்பு பெட்டியில் வழங்கப்படும் வேண்டும் கூறப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு ஷெல்லில் வழங்கப்படும். ஜப்பானிய வடிவமைப்பாளர்களால் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளை ஒன்றிணைத்து ஷெல் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் வெவ்வேறு முறை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து