முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காஷ்மீர் செல்கிறார்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.

22-வது கார்கில் வீரர்கள் நினைவு தினத்தையொட்டி ஜூலை 26-ம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜனாதிபதி மரியாதை செலுத்த உள்ளார். மேலும் லடாக்கில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  27-ம் தேதி, மாதா வைஷ்ணோ தேவி குகைக்கோவிலுக்கு அவர் செல்வார் என்று தெரிகிறது. அதே நாளில் அவர் டெல்லி திரும்புகிறார்.  ஜனாதிபதி வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கீழ்நிலை பணியாளர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து