முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ்: ஆஷ்லே பார்ட்டி வெளியேறினார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து ஆஷ்லே பார்டி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

அதிர்ச்சி தோல்வி...

ஒலிம்பிக் போட்டித்தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  நேற்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார். ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

ஜோகோவிச் தகுதி....

ஒலிம்பிக் தொடரில், டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொலிவிய வீரர் டெலியனை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.

புதிய சாதனை....

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் பட்டங்களை தொடர்ச்சியாக வென்று இருக்கும் ஜோகோவிச் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுடன் அடுத்து வரும் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றால், ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். இந்த அரிய சாதனையை ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் (1988-ம் ஆண்டு) மட்டுமே நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து