காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகையின் டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல்

Yashika 2021 07 26

Source: provided

சென்னை : காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா அவரது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பி கொண்டு இருந்த போது தடுப்பு வேலியில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் யாஷிகாவின் தோழி  பவானி நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது 2 ஆண் நண்பர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் காரை ஓட்டி வந்த யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரை வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்றும் யாஷிகா குடி போதையில் இல்லை எனவும் தெரியவந்தது. தற்போது யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுகர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து