முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கல்விக்கொள்கையின் ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

புதிய கல்விக் கொள்கையின் ஓராண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக மத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக்கொள்கையை உருவாக்கி உள்ளது. இந்த கொள்கைக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நாளை 29-ம் தேதி உரையாற்றுவதாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.  

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், கற்றல் வரம்பை மாற்றுவதற்கும், கல்வியை முழுமையாக்குவதற்கும், சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு வலுவான அடித்தளங்களை உருவாக்குவதற்கும் ஒரு வழிகாட்டும் தத்துவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை விளங்குகிறது. இந்த கொள்கையின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி வருகிற 29-ந்தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த கொள்கையை அமல்படுத்துவதில் தற்போது வரையிலான முன்னேற்றம், இந்த கொள்கையில் அடுத்தடுத்து வரவிருக்கும் திட்டங்களுக்கான செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி தனது உரையில் தெரிவிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து