முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரயில்வே சார்பில் ரூபாய் 2 கோடி பரிசு

செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்து நாட்டுக்கே பெருமை சேர்த்த ஒலிம்பிக் வெள்ளி மங்கை மீராபாய் சானுவுக்கு போலீஸ் ஏ.எஸ்.பி. பதவி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி பரிசு... 

மேலும் ரயில்வே சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியி்ல் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்புவரை ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராகத்தான் மீராபாய் சானு பணியாற்றி வந்தார். இந்நிலையில் விளையாட்டுப்பிரிவி்ல் காவல்கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2-வது வீராங்கனை...

கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் முதல்வர்... 

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்து, அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார். இந்நிலையில் டோக்கியோவிலிருந்து மீராபாய் சானு தாயகம் திரும்பினார். 

முதல்வர் வேண்டுகோள்...

மணிப்பூர் சென்ற சானுவுக்கு அந்த மாநில மக்கள் உற்சாகமான வரவேற்பு அளிக்க காத்திருக்கின்றனர். அதோடு முதல்வர் பிரேன் சிங் மேற்கொண்ட அறிவிப்பில், ““ மீராபாய் சானு தற்போது செய்துவரும் ரயில்வே துறையில் இருக்கும் பணியிலிருந்து விடுவித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். 

உயர் அதிகாரியாக...

அவருக்கு மணிப்பூர் அரசு சார்பில் போலீஸ் துறையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக (விளையாட்டுக்கோட்டா) பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சானு இனிமேல் மணிப்பூர் போலீஸ் துறையில் இணைந்து பணியாற்றலாம். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து