முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் - 5-ம் நாள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்: இந்திய ஜோடி தோல்வி

செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

5-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வியை சந்தித்தது.  கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் சவுரவ் சவுத்ரி  இணை 7-வது  இடம் பிடித்ததால் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. முதல் சுற்றில்  முதலிடம் பிடித்த நிலையில் 2-வது சுற்றில் இந்திய ஜோடி 7-வது இடம் பிடித்ததால் ஏமாற்றம் அளித்துள்ளது.

____________

ஹாக்கி - இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி

இந்திய பெண்கள் ஹாக்கி அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில், 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்தது. 

இந்திய அணியின் கோல் முயற்சியையும் தொடர்ந்து முறியடித்தது. 2வது பாதியில் ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து, 2-0 என வெற்றி பெற்றது. கேப்டன் லாரன்ஸ் நைக், ஸ்கார்டர் ஆன் கேத்ரினா ஆகியோர் கோல் அடித்தனர். இந்தியா அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

____________

பெண்கள் செய்லிங்: இதுவரை நேத்ரா குமணன் 134 புள்ளிகள்

ஒலிம்பிக்கில்  செய்லிங் போட்டியில் பெண்களுக்கான லேசர் ரேடியல் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் கலந்து கொண்டுள்ளார். மொத்தம் 10 ரேஸ் அடங்கும்

ஏற்கனவே நான்கு ரேஸ்கள் முடிந்த நிலையில் நேற்று 2 ரேஸ் நடைபெற்றது. 5-வது ரேஸில்  (32+310) என்ற புள்ளியுடன் 32-வது இடத்தை பிடித்தார். 6-வது ரேஸில் (39+4:39) என்ற புள்ளிகளுடன் 38-வது இடத்தை பிடித்தார். இதுவரை ஆறு ரேஸ்களிலும் 134 புள்ளிகள் பெற்றுள்ளார்.

_____________

பெண்கள் டைவிங்: சீனாவுக்கு தங்கம்

பெண்களுக்கான  டைவிங் போட்டியில் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவு இறுதி சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டது. இரண்டு பேர் இணைந்து பங்கெடுத்த இந்த போட்டியில் மொத்தம்  6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் சீன ஜோடி 363.78 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து  தங்கப்பதக்கத்தை வென்றது.

310.80 புள்ளிகள் கணக்கில் அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது. 299.70 புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றது.

_____________

மகளிர் ஒற்றையர் டென்னிஸ்: ' நவோமி ' அதிர்ச்சி தோல்வி

ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா மற்றும் செக் குடியரசின் மார்கெட்டா ஆகியோர் மோதினர். இதில் மார்கெட்டா சிறப்பாக விளையாடி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். 

இதனையடுத்து காலிறுதி போட்டிக்கு மார்கெட்டா தகுதிப் பெற்றார். ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக அண்மையில் நடந்து முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில்கூட பங்கேற்காமல் இருந்தார் நவோமி ஒசாகா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து