முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்

புதன்கிழமை, 28 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம்  ஆகஸ்ட் 7-ம் தேதி வருகிறது. அப்போது சட்டசபையில் கருணாநிதியின் உருவ படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க கடந்த  19-ம் தேதி டெல்லி சென்ற போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளின் போது அவரது படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  அவரது அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் ஆகஸ்ட் 2-ம் தேதி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ஜனாதிபதி நண்பகல் 12.45-க்கு சென்னை வந்தடைவார். மாலை 5 மணிக்கு நடைபெறும் சட்டசபை நூற்றாண்டு விழாவில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். 

பின்னர்  நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வருகிற 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகிற 3-ம் தேதி ஊட்டிக்கு வருகிறார்.  பின்னர் அவர் ராஜ்பவனில் தங்குகிறார்.

தொடர்ந்து 5-ம் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து