டோக்கியோ ஒலிம்பிக்: 6-ம் நாள் : பெண்கள் ஹாக்கி: இந்தியா தோல்வி

Indian-Women-Hockey 2021 07

Source: provided

இந்திய பெண்கள் ஹாக்கி அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல்கணக்கிலும், ஜெர்மனியிடம் 2-0 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்தது. இந்திய அணியின் கோல் முயற்சியையும் தொடர்ந்து முறியடித்தது. 

2வது பாதியில் இங்கிலாந்தும், இந்தியாவும் ஒரு கோல் அடித்தது. இதனால் 2-1 என இருந்தது. 3வது பாதியில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற்றது. 4வது பாதியில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதியில் இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது. இந்தியா அடுத்தடுத்து 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.

____________

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ரைஃபிள் ஆகிய இரண்டிலுமே கலப்பு அணிகள் பிரிவில் இந்திய போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறினர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் 20 அணிகள் பங்கேற்ற தகுதிச்சுற்றின் முதல் நிலையில் சௌரவ் சௌதரி - மானு பாக்கர் இணை 582 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. மற்றொரு இந்திய ஜோடியான அபிஷேக் வர்மா - யஷஸ்வினி சிங் தேஸ்வால் 380 புள்ளிகளுடன் 17-ஆவது இடமே பிடித்தனர்.

தகுதிச்சுற்றின் முதல் நிலையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் 2-ஆவது நிலையில் மோதின. அதில் சௌரவ் - மானு ஜோடி 380 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது.

பதக்கம்:இப்பிரிவில் சீனா தங்கமும், ரஷியா வெள்ளியும், உக்ரைன் வெண்கலமும் வென்றன.

பின்னர் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் - இளவேனில் வாலறிவன், தீபக் குமார் - அஞ்சும் முட்கில் இணைகள் பங்கேற்றன. 29 அணிகள் பங்கேற்ற இந்த பிரிவில், இரு இந்திய ஜோடிகளுமே தகுதிச்சுற்றின் முதல் நிலையிலேயே வெளியேறின.

திவ்யான்ஷ் - இளவேனில் இணை 626.5 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்தையும், தீபக் - அஞ்சும் ஜோடி 623.8 புள்ளிகளுடன் 18-ஆவது இடமும் பிடித்தன. முதல் 8 இடங்களுக்குள்ளாக வரும் அணிகளே 2-ஆவது நிலை தகுதிச்சுற்றுக்கு தகுதிபெறும்.

பதக்கம்: இந்தப் பிரிவிலும் சீனா தங்கம் வெல்ல, அமெரிக்கா வெள்ளியும், ரஷியா வெண்கலமும் கைப்பற்றின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து