முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டு பாண்டிச்சேரி பயணக் கதை

வெள்ளிக்கிழமை, 30 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரையிலான பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'டேக் டைவர்ஷன்'  . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் வெளியிட்டார். அப்போது, காட்சிகளைப் பார்த்துப் பாராட்டியதுடன் படக்குழுவினரையும்  வாழ்த்தினார்.

'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். அறிமுக நாயகனாக சிவகுமார், நாயகியாக பாடினி குமாரும்  நடித்துள்ளார்.  இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.

ஜான் விஜய்  வில்லனாக நடிக்க. இசை ஜோஸ் பிராங்க்ளின். 

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில்  பணியாற்றியுள்ளார்.  படத்தொகுப்பு - விது ஜீவா. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து