முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோ சாலையில் உள்ள பசுக்களின் பாலில் இருந்து சோப்பு, ஊதுபத்தி தயாரிக்க தேவஸ்தானம் முடிவு

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி கோ சாலையில் உள்ள பசுக்கள் மூலம் பெறப்படும் பொருட்களில் இருந்து சோப்பு, ஊதுபத்தி, ஷாம்பு தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் ஏராளமான பசுக்கள் உள்ளன.  பசுக்களிடம் இருந்து பெறப்படும் சாணம், பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேவஸ்தானம் பல்வேறு பொருட்களை தயாரிக்க ஆயூஷ் துறையிடமிருந்து காப்புரிமை பெற்றுள்ளது.

சோப்பு, அகர்பத்திகள், தூய்மை செய்யும் பொருட்கள், விபூதி, சாம்பிராணி, கப் சாம்பிராணி, பற்பசை, ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களுடன் சாணத்திலிருந்து வரட்டி தயாரிக்கப்பட உள்ளன.  விரைவில் இந்த பொருட்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் 17,030 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8,579 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து