முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை அடுத்தடுத்து வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று  காலை டோக்கியோவில் உள்ள ஒயி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது காலிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களம் இறங்கியது.  பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சாய்த்தது. இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே ஆடவர் ஹாக்கியில், இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மகளிர் அணியின் இந்த சாதனை, இந்திய மக்களை ஒட்டுமொத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன். நீங்கள் வரலாறு படைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து