முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களில் 5-ம் தேதி முதல் தமிழில் அர்ச்சனை

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் வருகிற 5-ம் தேதி  முதல் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்குகிறது. 

சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடைபெறும். இந்த கோவில்களுக்கு சென்று சுவாமிக்கு அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி தமிழில் வழிபாடு செய்யலாம். இதற்காக தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களையும் தேட வேண்டாம். கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரும், செல்போன் எண்ணும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு அழைத்து விரும்பும் சன்னதியில் விரும்பும் தெய்வங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம். மேலும் ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி நெல்லையப்பர், மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்கோவில், பழனி, மருதமலை, திருத்தணி, திருவானைக்காவல், திருவண்ணாமலை உள்ளிட்ட 47 கோவில்களில் இந்த வசதி வரும் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து