முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி காலிறுதி: ஆஸி.யை வீழ்த்தி முதன் முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி!

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் 

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறி இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. 

11-வது நாள்...

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் 11வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஹாக்கி போட்டி காலிறுதியில் இந்தியா அணி தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

தொடர் தோல்வி...

முன்னதாக முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. அயர்லாந்தை இந்திய அணி 1-0 என வீழ்த்தியது. தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த வந்தனா கட்டாரியா, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

காலிறுதி வாய்ப்பு...

இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ குரூப்பில் 4-வது இடத்தில் இருந்தது இந்தியா. 5-வது இடத்திலிருந்த அயா்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலையிலிருந்தது. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அயா்லாந்து 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா 4-வது இடத்தில் நிலைத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. 

குர்ஜித் கவுர்... 

நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.  குர்ஜித் கவுர் கோல் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியுள்ளார்.பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்தார் குர்ஜித் கவுர், பரபரப்பான காலிறுதி ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார், இதுவே அவரது முதல் ஒலிம்பிக் கோலாகவும் அமைந்தது. 

41 ஆண்டுகளுக்கு... 

ஆஸ்திரேலிய பெண்கள் ஹாக்கி அணி 3 முறை சாம்பியன்களாகும். இந்திய ஆண்கள் அணி கடைசியாக 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரைஇறுதியில் கால்பதிக்கும் வாய்ப்பு கனிந்துள்ளது. 

அர்ஜஜெண்டினாவுடன்...

அரையிறுதியில் அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முன்னதாக அர்ஜெண்டினா அணி ஜெர்மனியை 3-0 என்று வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

2-வது முறையாக...

2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தமுறை முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 

அரையிறுதி ஆட்டம்:

ஆகஸ்ட் 4: இந்திய மகளிர் ஹாக்கி அணி vs ஆர்ஜெண்டினா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து