முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி: இந்தியா - பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்திய ஆடவர் ஹாக்கி அணி இன்று நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையை மேலோங்கியுள்ளது. 

இங்கி.யை வீழ்த்தி...

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் அரைஇறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த கால்இறுதியில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

அரையிறுதிக்கு...

ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980-ல் தங்கப்பதக்கம் பெற்றது. அதன் பிறகு 1984 ஒலிம்பிக்கில் 5-வது இடத்தைப் பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. 2008-ல் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் இந்திய ஹாக்கி அணி சிறப்பான நிலையை எட்டி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

2-வது இடத்தில்... 

இந்திய அணி அரை இறுதியில் பெல்ஜியத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை வீழ்த்தி 3-ம் நிலையில் உள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எழுச்சி...

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் வழக்கமான நிலை ஏற்படும் என்று கருதப்பட்டது. அதன் பிறகு இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் எழுச்சி பெற்றது. தொடர்ச்சியாக ஸ்பெயின் (3-0), அர்ஜென்டினா (3-1), ஜப்பான் (5-3) அணிகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து