முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும் சீனா: இந்திய அணிக்கு 61-வது இடம்

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா 24 தங்கப்பதக்கத்துடன் முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 61-வது இடத்தில் உள்ளது.

சீனா ஆதிக்கம்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் தங்கப்பதக்கங்களை குவித்து வருகின்றன. சீனா 24 தங்கம், 14, வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா 20 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

ஜப்பான் 3-வது...

போட்டியை நடத்தும் ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 14 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 12 தங்கத்துடன் 5-வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 10 தங்கத்துடன் 6-வது இடத்திலும் உள்ளது. இந்தியா தலா ஒரு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் 61-வது இடத்தை பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து