முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் - 11-வது நாள் வட்டெறிதல்: கமல்ப்ரீத் தோல்வி

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் தோல்வியை தழுவினார். ஆறு முயற்சிகளில் மூன்று தோல்வியடைந்தது, மற்ற மூன்று முயற்சிகளில் 61.62, 63.70 மற்றும் 61.37 மீட்டர் தூரம் வரை, வட்டை அவர் எறிந்திருந்தார். பதக்கத்தை நெருங்க முடிந்த அவரால் அதை வெள்ள முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம் தான்.   மகளிர் வட்டெறிதலில் அமெரிக்காவின் வலேரி, ஜெர்மனியின் கிறிஸ்டின், கியூபாவின் யைமி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். கமல்ப்ரீத் கவுர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் மூன்று இடம் பிடித்த வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தடகளம்: டூட்டிக்கு 7-வது இடம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 7வது இடம் பிடித்துள்ளார். 11வது நாளான நேற்று நடந்த மகளிர் 200 மீட்டர் தடகள ஓட்ட பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 7வது இடம் பிடித்துள்ளார்.  இதனால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளார்.

பளுதூக்குதல் - துப்பாக்கிச்சுடுதல் 

டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சீனா தங்கம் வென்றது. சீனாவின் சாங்ஹோங் ஷாங் 466 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 466 புள்ளிகளுடன் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைப் படைத்து அசத்தினார். ரஷ்யா வீரர் செர்கே காமென்ஸ்கி 464.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். செர்பிய வீரர் மிலென்கோ செபிக் 448.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 87 கிலோ எடைப்பிரிவு குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை வாங் ஸ்னாட்ச் முறையில் 120 கிலோ, க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 150 கிலோ என மொத்தம் 270 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஈகுவடார் வீராங்கனை யஜைரா தமரா 113+150 என 263 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். டொமினிக்கன் ரிபப்ளிக் வீராங்கனை சான்டனா 116+140 என 256 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

டிரிபிள் ஜம்ப்: வெனிசுலா உலக சாதனை

பெண்களுக்கான லாங்க் ஜம்ப் போட்டி இறுதிச் சுற்றில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும்  6 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எது அவர்களுடைய சிறப்பான தாண்டுதலோ, அது போட்டி முடிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி வெனிசுலாவின் யுலிமார் ரோஜாஸ் 6-வது வாய்ப்பில் 15.67 (+0.7) மீட்டர் தூரத்திற்கு தாண்டினார். மற்ற வீராங்கனைகள் இந்த தூரத்தை விட குறைவாகவே தாண்டியதால் யுலிமார் ரோஜாஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் தாண்டியது உலக சாதனையாகும். அத்துடன் வெனிசுலாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

200மீ ஓட்டம்: ஜேக்சன் தோல்வி

100மீ ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜமைக்கா வீராங்கனை ஜேக்சன், 200மீ ஓட்டத்திற்கான தகுதிச்சுற்றில் பின்தங்கி அரையிறுதி வாய்ப்பை இழந்தார். ஜமைக்கா, அமெரிக்க வீரர்கள்/வீராங்கனைகள் இதில் ஆதிக்கம் செலுத்துவார்கள். பெண்களுக்கான 100மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனைகள் மூன்று பதக்கங்களையும் வென்றனர். ஷெரிக்கா ஜேக்சன் வெண்கலப் பதக்கம் வென்றார். நேற்று பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயத்தின் தகுதிச்சுற்று நடைபெற்றது. ஷெரிக்கா ஜேக்சன் ஹீட்ஸ் 5-ல் ஓடினார். 

அவருடன் மேலும் ஐந்து வீராங்கனைகள் பங்கேற்றனர். பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். இதில் ஷெரிக்கா ஜேக்சன், இத்தாலியின்  டலியா கட்டாரியா ஆகியோர் பந்தய தூரத்தை 23.26 வினாடிகளில் கடந்தனர். மில்லி செகண்ட் அடிப்படையில் டலியா கட்டாரியா (.251) 3-வது இடத்தை பிடித்தார். ஜேக்சன் (.255) .004 மில்லி செகண்ட் வித்தியாசத்தில் பின்தங்கி அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

பெண்கள் 100மீ தடைதாண்டுதல் 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீ தடைதாண்டுதல் ஓட்டத்தின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் வீராங்கனைகள் சிட்டாக பறந்தனர். பியூர்டோ ரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கமாசோ குயின் தடைகளை தாண்டி பந்தய தூரத்தை 12.37 வினாடிகளில் கடந்த தங்கப்பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனை கெண்ட்ரா ஹாரிஸ்சன் 12.52 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜமைக்கா வீராங்கனை மேகன் டாப்பர் 12.55 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து