எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : கொரோனா காரணமாக நீர்நிலைகளுக்கு வர தடை விதிக்கப்பட்டதால், ஆடிப்பெருக்கு விழா களைஇழந்தது. மக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்போது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு காவிரி தாய்க்கு, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவர். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது.
ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்துக்கு தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும், திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். ஆடி பெருக்கன்று காவிரி படித்துறைகளில் மக்கள் திரண்டு பலவகை உணவுகளை படைத்து, மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்வர்.
சிலர் வீடுகளில் முளைப்பாரி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள். தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை ஓய்ந்த நிலையில், தற்போது தொற்று பரவல் மீண்டும் லேசாக துவங்கி உள்ளது. இதனால் திருச்சி, தஞ்சை, புதுகை, திருவாரூர், நாகை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகளில் மக்கள் கூட அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன. மேலும் முக்கியமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலே ஆடிப்பெருக்கை கொண்டாடினர். பெண்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர்.
ஆடிபெருக்கு விழாவுக்கு பெயர்பெற்ற திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். நேற்றைய தினம் அம்மா மண்டபம் மூடப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையையும் மீறி வழிபாடு செய்ய திருச்சி மற்றும் வெளியூர்களிலிருந்து வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்பமண்டப தெரு காவிரி படித்துறையில் ஆண்டுதோறும் ஆடிபெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த படித்துறை நேற்று மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. அதேசமயம் திருவையாறு திருமஞ்சனவீதி காவிரி படித்துறையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு காவிரி தாய்க்கு படையலிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதேபோல் நாகை, வேதாரண்யம், பூம்புகார் கடற்கரைகளும் வெறிச்சோடியது. அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் மாவட்டங்களிலும் நீர்நிலைகளுக்கு செல்லும் வழிகளில் தடுப்பு வைத்து மூடப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ. 3,641 கோடி செலவு செய்த மோடி அரசு: ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
20 Apr 2024புது டெல்லி, விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகி உள்ளது.