பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 5-ல் உண்ணாவிரத போராட்டம்

Annamalai 2021 07 16

Source: provided

ஈரோடு : தமிழக விவசாயிகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் தான் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேகதாது அணைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தப்படவிருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினம்  நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 1967-க்குப் பின் வந்த தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் குறித்த வரலாறு இல்லை. நிறைய வரலாறு புறக்கணிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கீழடி ஆய்வை வரவேற்பதாக தெரிவித்த அண்ணாமலை, கீழடி ஒருவருக்கும் சொந்தமில்லை என்றார். நீட் தேர்வை பொருத்தவரை சமூகநீதியை தாண்டி வெற்றி பெற்றுள்ளது என்றும், நீட் யாருக்கும் எதிரானது அல்ல என்றும், மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும் என்றார். பா.ஜ.க. உண்ணாவிரதம் கர்நாடகத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் எதிரானது.

தமிழக விவசாயிகளுக்காக பொதுமக்களுக்காகத்தான் உண்ணாவிரதம் என்று கூறிய அவர், தமிழக மக்களையும் , தமிழர் உணர்வையும் பிரதமர் மோடி மதித்து வருவதாகவும் தமிழக பா.ஜ.க. ஒவ்வொரு வீடு வீடாக சென்று மோடி செய்த திட்டங்கள் குறித்து விளக்கும் என்றார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை முதலில் தி.மு.க. செய்யட்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து