முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 போட்டிகள் கொண்ட தொடர்: 'இந்தியா - இங்கிலாந்து ' மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 3 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி போட்டியில் வென்று வெற்றியுடன் கணக்கை தொடங்குமா ? என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்...

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

நியூசி. வெற்றி...

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக திறமையுடன் ஆட வேண்டிய நிலை உள்ளது.

கே.எல்.ராகுல்...

இந்த போட்டிக்கான 11 வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கிறது. சுப்மன்கில் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ரோகித்சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியின் போது அகர்வால் ஹெல்மட்டில் பந்து தாக்கியது. இதனால் அவர் ஆடமாட்டார். எனவே கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடலாம்.

விகாரிக்கு வாய்ப்பு?

மிடில் ஆர்டர் வரிசையில் புஜாரா, கோலி, ரகானே, ரி‌ஷப்பண்ட் உள்ளனர். புஜாராவின் ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. இதேபோல ரகானே உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகம். அவர் விளையாடாவிட்டால் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சிராஜூக்கு வாய்ப்பு...

சுழற்பந்து வீரர்களில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரும், வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ‌ஷமி, இசாந்த் சர்மா ஆகியோரும் இடம் பெறுவார்கள். முகமது சிராஜூக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.

14 ஆண்டுகளுக்கு... 

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு ஆடிய 3 தொடரிலும் தோற்றது. கடைசியாக 2018-ல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில்... 

இந்திய அணி பிப்ரவரி- மார்ச் மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமே. ஆனால் அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்திடம் தொடரை இழந்து இருந்தது. மேலும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் ஆடவில்லை.

127-வது டெஸ்ட்... 

இரு அணிகளும் இன்று மோதுவது 127-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 126 போட்டியில் இந்தியா 29-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி-டென் டெலிவி‌ஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மயங்க் அகர்வால் விலகல்

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கிய காரணத்தினால் முதல் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.  ஏற்கனவே தொடக்க வீரர் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது மயங்க் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள காயம் இந்திய அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து