முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதி: இறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி? அர்ஜெண்டினாவுடன் இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 3 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - அர்ஜெண்டினா 

அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிப் பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற ஆவல் மேலோங்கியுள்ளது.

மூன்று தோல்வி...

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. 

ஹாட்ரிக் கோல்... 

அயர்லாந்தை இந்திய அணி 1-0 என வீழ்த்தியது. தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த வந்தனா கட்டாரியா, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

காலிறுதி வாய்ப்பு... 

இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று ‘ஏ’ குரூப்பில் 4-வது இடத்தில் இருந்தது இந்தியா. 5-வது இடத்திலிருந்த அயா்லாந்து தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கான காலிறுதி வாய்ப்பு பறிபோகும் நிலையிலிருந்தது. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அயா்லாந்து 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்தியா 4-வது இடத்தில் நிலைத்து காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. 

ஆஸி.யை வீழ்த்தியது...

காலிறுதி ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கெளர் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியது.

அரையிறுதிக்குள்... 

2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தமுறை முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 

ரசிகர்கள் ஆவல்...

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி அரையிறுதியில் பெல்ஜியத்துடன் 2-5 என்ற கணக்கில் தோல்வி கண்டது. ஆனால் இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிப் பெற்று இறுதிக்கு முன்னேரி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யுமா இந்திய மகளிர் அணி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து