முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்ஸை விட அதிக தங்கப் பதக்கம் வென்ற ' சீனா' தற்போது பதக்கப் பட்டியலில் முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 3 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் 12-வது நாளில் பதக்கப் பட்டியலில் சீனா 29 தங்கப் பதக்கம், 18 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 63 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ரியோ ஒலிம்பிக்ஸை விடவும் அதிக தங்கம் வாங்கியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் இன்றி...

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. பின்னர் அமெரிக்க, ஜப்பான் முதலிடம் பிடித்தன.

அமெரிக்கா 2-வது...

12-வது நாளான நேற்று இரவு 9 மணி நிலவரப்படி, சீனா 29 தங்கப் பதக்கம், 18 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 63 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் அமெரிக்கா 22 தங்கம், 27 வெள்ளி, 17 வெண்கலம் மொத்தமாக 66 பதக்கங்களை  பெற்றுள்ளது. ஜப்பான் 18 தங்கம் 6 வெள்ளி, 10 வெண்கலம் ஆகியவற்றுடன் 34 பதக்கங்களுடன் 3ம் இடம் வகிக்கிறது. 14 தங்கம், 4 வெள்ளி, 15 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 33 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் வகிக்கிறது.      ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 5ம் இடத்தில் மொத்தம் 50 பதக்கங்களுடன் உள்ளது, இது 12 தங்கம், 21 வெள்ளி, 17 வெண்கலத்துடன் உள்ளது. 

63-ம் இடத்தில்...

6வது இடத்தில் கிரேட் பிரிட்டன் 11 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் 35 பதக்கங்களுடன் உள்ளது. ஜெர்மனி மொத்தமாக 26 பதக்கம் பெற்றுள்ளது இதில் 7 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் என்று 7ம் இடத்தில் உள்ளது. 8வது இடத்தில் பிரான்ஸ் 6 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலத்துடன் மொத்தம் 23 பதக்கம் பெற்றுள்ளது. 9வது இடத்தில் கொரியா 6-4-9 என்று 19 பதக்கங்களுடன் உள்ளது. 10வது இடத்தில் நியூசிலாந்து  6-3-5  என்று 14 பதக்கங்களுடன் உள்ளது. இந்தியா 1 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2 பதக்கங்களுடன் 63ம் இடத்தில் உள்ளது.

அமெரிக்கா முதலிடம்...

2012, 2016 ஆகிய இரு ஒலிம்பிக்ஸிலும் தலா 46 தங்கப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. ரியோ ஒலிம்பிக்கில் சீனா 26 தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. எனினும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் 48 தங்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்தது. தற்போது டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சீன வீரர்கள் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் சீனாவுக்கு 5 தங்கம் கிடைத்தது. இதனால் பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை விடவும் 7 தங்கம் அதிகம் பெற்று மொத்தம் 29 தங்கத்தை வென்று தற்போது வரை முதலிடத்தில் உள்ளது சீனா. 

அதிக தங்கம் வென்றது...

ஒலிம்பிக் போட்டி முடிய இன்னும் ஆறு நாள்கள் மீதமிருக்கும் நிலையில் அதற்குள் ரியோ ஒலிம்பிக்ஸில் பெற்றதை விடவும் அதிக தங்கம் வென்றுள்ளது. அடுத்த ஆறு நாள்களில் இன்னும் அதிக தங்கத்தை சீன வீரர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து